சிட்னி: ஆஸ்திரேலியா தெற்குப் பகுதியில் உள்ள தீவான டாஸ்மேனியா காட்டுப் பகுதியில் உலகிலேயே உயரமான மரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மரமொன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் 100 மீட்டர் அளவு உயரத்தைக் கொண்டிருக்கிறது.
ஜின்வா (Xinhua) செய்தி நிறுவனத்தின்படி, இதற்கு முன்னர் 115.55 மீட்டர் அளவில் உயரமான சிவப்பு மரம் கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தது.
எனினும், ‘செஞ்சுரியன்’ (Centurion) என்றழைக்கப்படும் மிக உயரமான பூக்கும் மரம் வகை தஸ்மேனியாவில் உள்ளது என அது செய்தி வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ உயரம் 100.5 மீட்டர் ஆகும்.
லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகத் துல்லியமாக அம்மரத்தின் அளவினை ஜாயண்ட் ட்ரீ எக்ஸ்பெடிஷன் (Giant Tree Expedition) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த மரத்தின் ஆயுட்காலம் சுமார் 500 ஆண்டுகளாகும். கலிபோர்னியா காடுகளில் உள்ள மரங்களின் ஆயுட்காலத்தை விட இது மிகக் குறைவானதே.