Home நாடு 2 மில்லியன் கையூட்டுப் பெற்றதாக தெங்கு அட்னான் மீது குற்றச்சாட்டு!

2 மில்லியன் கையூட்டுப் பெற்றதாக தெங்கு அட்னான் மீது குற்றச்சாட்டு!

1171
0
SHARE
Ad

Tengku Adnan Tengku Mansor

கோலாலம்பூர்: முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) சம்பந்தப்பட்ட நிலம் ஒப்பந்தம் ஒன்றில், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான தெங்கு அட்னான் நீதிபதி அஸ்மான் அகமட் முன்னிலையில் இக்குற்றச்சாட்டு மீது விசாரணைக் கோரினார்.

#TamilSchoolmychoice

தெங்கு அட்னான், குற்றவியல் சட்டம் 165-வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம். இதற்கிடையே, 500,000 ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.