சென்னை: தமிழில் பிற மொழிக் கலப்பு என்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனை ஒரு பொருட்டாக எண்ணாததால் ஆங்கிலமும் தற்போது தமிழில் எழுதப்பட்டு அது தமிழாகக் கொள்ளப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. சோழர்கள் காலத்தில் பிற மொழிக் கலப்பானது நிறைய அளவில் நடந்தேறியது என்பது வரலாற்று உண்மை.
ஆயினும், தற்போது தமிழக அரசு தமிழ்நாட்டில் பிற மொழிகளில் பெயரிடப்பட்டுள்ள 3,000 ஊர்கள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்ற முடிவெடுத்துள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் (படம்) தெரிவித்தார். பிற மொழியின் ஆதிக்கத்தினைக் களைய இம்மாதிரியான செயல்பாடுகள் வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், கூறிய பாண்டியராஜன் இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான அரசு அறிக்கை வெளியிடப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து 3,000 பிற மொழிப் பெயர்களை சேகரித்து, அவை தமிழுக்கு மாற்றம் செய்யப்படும் எனவும் கூறினார்.