சாகித்திய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் இந்த நாவலை ஆதாரபூர்வ அம்சங்களுடன் எழுதியிருந்தார். இதே போன்று இவர் வரலாற்றுபூர்வப் பின்னணியோடு எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற நாவலுக்கு 2011-ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. இந்த நாவல்தான் பின்னர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அரவான்’ என்ற திரைப்படமாக வெளிவந்தது.
வாசகர்களின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்த நாவலுக்கான கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் அற்புதமான வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருந்தார் ஓவியர் மணியம் செல்வன்.
தமிழர்களின் பெருமையைப் பற்றிப் பேசுவது எவ்வாறு குறுகிய வாதமாக இருக்க முடியும் என்றும் ஸ்டாலின் தனதுரையில் கேள்வி எழுப்பினார்.
1408 பக்கங்களை இரண்டு தொகுதிகளாகக் கொண்ட இந்த நூல், மணியம் செல்வனின் வண்ண ஓவியங்களோடு விகடன் குழுமத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
(படங்கள்: நன்றி : விகடன் இணையத் தளம்)