Home நாடு சிவராஜூக்குத் தடை : முடிவுக்கு எதிராக மஇகா சீராய்வு மனு

சிவராஜூக்குத் தடை : முடிவுக்கு எதிராக மஇகா சீராய்வு மனு

818
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கேமரன் மலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசிய உதவித் தலைவருமான சிவராஜ் சந்திரன், மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் மீண்டும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும் அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மஇகா நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைச் சமர்ப்பிக்கும் என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் (படம்) அறிவித்தார்.

பொதுத் தேர்தல் குறித்த சட்டதிட்டங்களை தேர்தல் ஆணையம் தனக்கு ஏற்ற வகையில் அர்த்தம் கற்பித்து முடிவுகள் எடுத்திருக்கிறது என்று கூறிய விக்னேஸ்வரன், “தேர்தல் குற்றங்கள் மீதான 1954 சட்டம், பிரிவு 37-இன் கீழ் யாரையும் ஊழல் ரீதியான குற்றம் இழைத்தவராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி பெயர் குறிப்பிடவில்லை” என்றும் தெரிவித்தார்.

“சட்டத்திற்கு விளக்கம் சொல்வதாகவும், அர்த்தம் கற்பிப்பபதாகவும் கூறி நீதிமன்றத்திற்குட்பட்ட அதிகாரங்களை தேர்தல் ஆணையம் தனது கையில் எடுத்துக் கொண்டு முடிவுகளை அறிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இன்றி, நீதிமன்ற வழக்கில் ஒரு வாதியாகவோ, பிரதிவாதியாகவோ, இல்லாத தேர்தல் ஆணையம் எவ்வாறு சிவராஜின் வேட்பாளர் தகுதியை முடிவு செய்தது?” எனவும் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையம் சட்டப்படி நடக்கிறதா என்பது கேள்விக் குறி என்றும் சாடிய விக்னேஸ்வரன் அடுத்த வாரம் மறுசீராய்வு மனு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.