Home இந்தியா அமரர் முகமது இட்ரிசுக்கு இரங்கல் தெரிவித்து கௌரவப்படுத்திய ஆனந்த விகடன்

அமரர் முகமது இட்ரிசுக்கு இரங்கல் தெரிவித்து கௌரவப்படுத்திய ஆனந்த விகடன்

858
0
SHARE
Ad

சென்னை – மலேசியாவின் பயனீட்டாளர் துறையில் நீண்ட காலம் பணியாற்றி தனது 93-வது வயதில் காலமான பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகமது இட்ரிஸ் குறித்து ‘அச்சமில்லா மலேசியத் தமிழர்’ என்ற தலைப்பில் ஒரு பக்கக் கட்டுரையை வெளியிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது தமிழகத்திலிருந்து வெளிவரும் வார இதழான ‘ஆனந்த விகடன்.

பொதுவாக தமிழகத்தின் நாளிதழ்களும், வார இதழ்களும் மலேசியத் தமிழர்கள் குறித்த தகவல்களையும், விவரங்களையும் வெளியிடுவதில்லை என்ற குறைகூறல்கள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன.

அதற்கு மாறாக, கடந்த மே 29 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில் முகமது இட்ரிஸ் பயனீட்டாளர் விவகாரங்களில் ஆற்றிய அயராத பணிகள் குறித்தும், அவரது வாழ்க்கை, கொள்கைகள் குறித்தும், பயனீட்டாளர்கள் சார்பில் அவர் நடத்திய போராட்டங்கள், அதற்காக சந்தித்த எதிர்ப்புகள், அவற்றையும் மீறி அச்சமின்றி அவர் எப்படியெல்லாம் போராடினார் என்பது குறித்தும் ஆனந்த விகடன் கட்டுரை அவரைப் பாராட்டியுள்ளது.