Home நாடு லத்தீஃபாவின் நியமனம் விவாதிக்கப்படும், அரசியல்வாதிகள் எம்ஏசிசியில் இருப்பது சரியானதல்ல!

லத்தீஃபாவின் நியமனம் விவாதிக்கப்படும், அரசியல்வாதிகள் எம்ஏசிசியில் இருப்பது சரியானதல்ல!

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளை நியமிக்கும் நாடாளுமன்றத்திற்கான சிறப்புப் பொதுக் குழுவிடம் லத்தீஃபா கோயாவின் நியமனம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என அதன் தலைவர் வில்லியம் லியோங் கூறினார்.

இது பற்றி விவாதிப்பதற்கு எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எம்ஏசிசி எந்த ஒரு சாராரையும் சார்ந்திராது முற்றிலுமாக சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பு என பக்காத்தான் ஹாராப்பான் கூறி வந்ததை அவர் நினைவூட்டினார்.

Latheefah Koya-macc-chief-infographics
#TamilSchoolmychoice

குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சார்ந்தவர் எம்ஏசிசியின் தலைவராக நியமிக்கப்பட்டால் ​​அது அரசியலாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஒரே கட்சியில் இருந்தபோதிலும், லத்தீஃபாவின் இந்த நியமனத்தை தாம் எதிர்ப்பதாக லியோங் கூறினார். அரசியல்வாதிகள் சுதந்திர அமைப்புகளின்  தலைவராக இருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

பிகேஆர் இது குறித்து விவாதிக்கும் என்று லியோங் கூறினார்.

இதனிடையே, லத்திஃபா கோயாவின் நியமனம் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இது குறித்து லத்திஃப்பா கருத்துரைக்கையில், தாம் பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக நேற்று திங்கட்கிழமையே கடிதம் அனுப்பி விட்டதாகத் தெரிவித்தார். மேலும், தாம் தற்போது அரசியல்வாதி அல்ல என அவர் குறிப்பிட்டார்.

சமூக, அரசியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த லத்தீஃபா கோயாவின் நியமனம் மலேசியர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒரு சில தரப்புகளின் ஆட்சேபத்தையும் எதிர்நோக்கியுள்ளது.

லத்தீபா வழக்கறிஞராக இருந்தாலும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணி என்பது புலனாய்வு சம்பந்தப்பட்டது என்பதால், ஏற்கனவே ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஒருவரை நியமிப்பதுதான் பொருத்தமானது என்ற கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது.