Home நாடு “சிறந்த சமூக சேவகரை இழந்தோம்” முகமது இட்ரிஸ் மறைவுக்கு வேதமூர்த்தி அனுதாபம்

“சிறந்த சமூக சேவகரை இழந்தோம்” முகமது இட்ரிஸ் மறைவுக்கு வேதமூர்த்தி அனுதாபம்

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதிபலனைக் கடுகளவும் எதிர்பாராமல் வாழ்வின் கடைசி வரை பொதுத் தொண்டாற்றிய சமூக சேவகர் எஸ்.எம். முகமது இட்ரிஸ் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புகழாரம் சூட்டினார்.

தன்னுடைய பொதுச் சேவைக்கு பொன் விழா கொண்டாடும் அளவிற்கு சுமார் ஐம்பது ஆண்டு காலம் மக்களுக்கு பயனீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த முகமது இட்ரிஸின் மறைவு மலேசிய மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகமட் இட்ரிஸ் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருளில் கலப்படம், இரசாயனக் கலப்பு, வெண்சுருட்டுப் பழக்கம், மதுப் பயனீடு குறித்தெல்லாம் பரந்த அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த முகமட் இட்ரிஸ், அரசு சாரா அமைப்பின் இலக்கணமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை வழிநடத்தி வந்தார்.

#TamilSchoolmychoice

நாட்டின் மத்தியக் கூட்டரசு ஒரு துறையையே (சுற்றுச் சூழல் அமைச்சகம்) உருவாக்குவதற்கு காரணமானவர் முகமட் இட்ரிஸ் என்றால், அவரின் சேவை எந்த அளவுக்கு உயர்வாக இருந்தது என்பதை நாம் ஊகிக்கலாம்.

அப்படிப்பட்ட எஸ்.எம்.முகமட் இட்ரிஸ் மறைவு, மலேசியப் பயனீட்டாளர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.