Home உலகம் ஆஸ்திரேலியா: மீண்டும் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்த ஸ்கோட் மெரிசன்

ஆஸ்திரேலியா: மீண்டும் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்த ஸ்கோட் மெரிசன்

700
0
SHARE
Ad

கான்பெரா – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) இந்த முறை வெற்றி பெறும் என வாக்களிப்புக்கு பிந்திய ஆய்வுகள் தெரிவித்த வேளையில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் நடப்பு பிரதமர் ஸ்கோட் மோரிசன் (படம்) சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை தொகுதிகளை வென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஸ்கோட் மோரிசன் மீண்டும் ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பதவியேற்பார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் முதன் முறையாக தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற ஆய்வுகள் பொய்த்துப் போன வேளையில், “அதிசயங்கள் நடைபெறும் என்பதை எப்போதும் நம்புபவன் நான்” என்று மோரிசன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷோர்ட்டன் தனது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டு, அடுத்த அரசாங்கத்தை தனது கட்சி அமைக்க முடியாது என்பதையும் அறிவித்தார்.

தொழிலாளர் கட்சியின் தலைவராக மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் பில் ஷோர்ட்டன் அறிவித்தார்.

76 தொகுதிகளை வென்றால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில் மோரிசனின் கன்சர்வேடிவ் கட்சி இதுவரையில் 73 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.