Home இந்தியா பாஜக: 306; காங்கிரஸ் 132; மற்ற கட்சிகள் 104 – டைம்ஸ் நௌ கருத்துக் கணிப்பு

பாஜக: 306; காங்கிரஸ் 132; மற்ற கட்சிகள் 104 – டைம்ஸ் நௌ கருத்துக் கணிப்பு

977
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியப் பொதுத் தேர்தலுக்கான 7-வது கட்டமான இறுதிக் கட்ட வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையோடு முடிவடைந்ததை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் தங்களின் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமான டைம்ஸ் நௌ வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 306 தொகுதிகளைப் பெறும் என்றும் காங்கிரஸ் 132 தொகுதிகளைப் பெறும் என்றும் மற்ற கட்சிகள் 104 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய ஊடகங்களும் பாஜகவே தனித்து பெரும்பான்மை பெறும் கட்சியாகத் திகழும் என்றும் குறைந்த பட்சம் 280 தொகுதிகளை பாஜகவோ அல்லது பாஜகவும், தோழமைக் கட்சிகளும் இணைந்த கூட்டணியும் பெறும் என்றும் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.