Home இந்தியா தமிழ்நாடு நாடாளுமன்றம் – திமுக 29; அதிமுக 9

தமிழ்நாடு நாடாளுமன்றம் – திமுக 29; அதிமுக 9

1482
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியப் பொதுத் தேர்தல் குறித்த வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில், தமிழ் நாட்டின் 38 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 29 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் எஞ்சிய 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும் என்றும் டைம்ஸ் நௌ வெளியிட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் மட்டும் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மற்ற ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளும் ஏறத்தாழ இதையே தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி 20-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்றாலும், அகில இந்திய அளவில் பாஜகவே மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பு திமுக நிலைப்பாட்டுக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.

நியூஸ் 18 என்ற மற்றொரு முன்னணி ஊடகம் 22 முதல் 24 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.