Home கலை உலகம் “பிக் பாஸ்-3” கொண்டாட்டம் தொடங்குகிறது

“பிக் பாஸ்-3” கொண்டாட்டம் தொடங்குகிறது

1261
0
SHARE
Ad

சென்னை – கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத் தொலைக்காட்சி இரசிகர்கள் திட்டிக் கொண்டே அதிக அளவில் பார்த்து இரசித்த நிகழ்ச்சி பிக்பாஸ். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வந்தார்.

மூன்றாவது தடவையாக இந்த முறையும் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரியலிடி ஷோ எனப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் யார் என்ற விவரங்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

அண்மையக் காலங்களில் நகைச்சுவையில் கலக்கி வரும் நடிகை மதுமிதா அவர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மற்றொருவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று கதாநாயகனாக உயர்ந்திருக்கும் மகேந்திரன் என்ற நடிகராவார்.

மேலும் பவர் ஸ்டார் சீனிவாசனும் பிக்பாஸ்-3இல் இணைகிறார் என்ற ஆரூடம் உலவி வருகிறது.