Home நாடு சீ பீல்ட்: கலவரத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் குற்றம் சாட்டப்பட்டனர்!

சீ பீல்ட்: கலவரத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் குற்றம் சாட்டப்பட்டனர்!

665
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சீ பீல்ட் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் இருவர், இன்று (திங்கட்கிழமை) குற்றம் சாட்டப்பட்டனர். லாரி ஓட்டுனரான, எம் . சந்திரன் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி, மதியம் 1:30 மணியளவில் அரசாங்க அதிகாரியை தனது பணியைச் செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், கோயில் வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆயினும், நீதிபதி நுர்ஷாயிரா அப்துல் சாலிம் முன்னிலையில் அக்குற்றங்களை சந்திரன் மறுத்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம்  பிரிவு 186 மற்றும் 147 கீழ் அவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், நீதிபதி முகமட் இக்வான் முகமட் நாசிர் முன்னிலையில், ஏ.ஜனகன் என்பவர், கோயில் வளாகத்தில் வாகனம் ஒன்றினை சேதப்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டார். குற்றவியல் சட்டம் 427 கீழ் குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத் தண்டையும் அல்லது அபராதமும் விதிக்கப்படலாம். ஜனகனும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்தார். 

3,000 ரிங்கிட் பிணையில், ஒருவர் உத்தரவாதத்துடன், சந்திரன்  விடுவிக்கப்பட்ட நிலையில், ஜனகனுக்கு 2,500 பிணை விதிக்கப்பட்டு ஒருவர் உத்தரவாதத்துடன் விடுவிக்கப்பட்டார்.