Home நாடு தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது!

தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது!

641
0
SHARE
Ad

காஜாங்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடப்பில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் அச்சட்டம் முடக்கப்படும் வரை அது நடைமுறையில் இருக்கும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.

இருப்பினும், இந்த சட்டத்தினை எம்மாதிரியான பிரச்சனைகளில், சூழ்நிலைகளில் கையாளப்படும் என்பதனை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

யாரும் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரதுஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதற்காக நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஆயினும்,இன்னும் தேவையற்ற பல்வேறு சர்ச்சைக்குரிய விவகரங்களை வெளிப்படையாகப் பேசும் தரப்புகள் இருக்கவே செய்கிறார்கள்” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறை அமைச்சர் லியூ வூய் கியோங் இந்த சட்டத்தின் பயன்பாடு தொடரக்கூடாது என கருத்துரைத்ததற்கு அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.

மதம், இனம், மற்றும் ஆட்சியாளர்களை இகழ்ந்து பேசும் பல கருத்துக்கள், தற்போது தீவிரமாக கருதப்படுகிறது.

நாங்கள் இதனை காவல் துறையினரின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறோம்” என்று அவர் கூறினார்.