கோலாலம்பூர் – பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் கைப்பற்றப்பட்ட 116.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் தங்களுக்கே சொந்தமானது என அம்னோ, மலேசியக் காவல் துறையினருக்கும், அரசாங்கத்திற்கும் எதிராகவும் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு சிறுமையானது, நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தும் முயற்சி, களங்கப்படுத்தும் நடவடிக்கை எனக் காரணங்களைக் காட்டி உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ நிக் ஹஸ்மாட் நிக் முகமட் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கைத் தொடுக்க அம்னோவுக்கு உரிமையில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். வாதியான அம்னோ பிரதிவாதிகளுக்கு 7 ஆயிரம் ரிங்கிட் செலவுத் தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக அம்னோ வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.