Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்!

இந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்!

764
0
SHARE
Ad

புது டில்லி: சமீபக்காலமாக டிக் டாக் செயலியின் மூலமாக பாதுகாப்பற்ற நிலையில் இந்திய இளைஞர்கள் பல்வேறு வகையிலான காணொளிகளை பதிவுச் செய்து வருவதைக் கண்டித்து அந்தச் செயலியைத் தடைச் செய்ய முடிவு செய்திருந்தது.

அண்மையில், டிக் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 6 மில்லியன் காணொளிகள் விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்ததுதற்போது, டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது.

இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல்  செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான இணையத்தின் வழி ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது எனவும் இதுபோன்ற விவகாரங்களில் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் எனக் கருத்து தெரிவித்து,  டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

தற்போது, இந்தியாவில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி பிளே ஸ்டோரிலிருந்து, அது நீக்கப்பட்டிருக்கிறது.