Home நாடு சண்டாக்கான்: பாஸ் போட்டியிடவில்லை, எதிர்கட்சிக்கு முழு ஆதரவு!

சண்டாக்கான்: பாஸ் போட்டியிடவில்லை, எதிர்கட்சிக்கு முழு ஆதரவு!

723
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்டீபன் வோங் தியேன் பாட் மறைவிற்குப் பின்னர், அத்தொகுதியில்  வருகிற மே 11-இல் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது.

சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் சபா மாநில பாஸ் கட்சி தேர்தலில் போட்டியிட தனது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறியிருந்தது. ஆயினும், தற்போது, பாஸ் கட்சி அத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

கடந்ததிங்கட்கிழமை நடந்த, பாஸ் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாகவும், நம்பிக்கைக் கூட்டணியை எதிர்த்து போட்டியிட இருக்கும் எதிர்கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவையும் அக்கட்சி தரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

எதிர்கட்சியின் வெற்றி நிச்சயமாக நாடு மற்றும் மக்கள் நலனுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கூடுதல் பலத்தை தரும் வகையில் அமையும் எனவும் அவர் கூறினார்.

சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் தியேன் பாட் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வருகிற மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், வேட்புமனுத் தாக்கல் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் வேளையில், மே 7-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.