Home நாடு அம்பேங்க் வங்கியை விசாரிக்கக் கட்டளை வெளியிடப்பட்ட பிறகு சோதனை நடத்தப்பட்டது!

அம்பேங்க் வங்கியை விசாரிக்கக் கட்டளை வெளியிடப்பட்ட பிறகு சோதனை நடத்தப்பட்டது!

787
0
SHARE
Ad

கோலாலம்பூர்எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை நான்காவது நாளான இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் தொடரப்பட்டது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஊழல் விசாரணைக்குத் தொடர்புடையவை என நம்பப்படும் வங்கி ஆவணங்கள் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் ஆவணங்கள்கடந்த 2015-ஆம் ஆண்டில் அம்பேங் வங்கியிலிருந்து பெறப்பட்டதாக  தேசிய வங்கியின் மேலாளர் அசிசுல் அட்சானி நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

நான்காவது சாட்சியான மலேசிய தேசிய வங்கியின் மேலாளர் அகமட் பார்ஹான் அம்பேங் வங்கியில் நடந்த பரிசோதனையை, நிதி நுண்ணறிவு மற்றும் தேசிய வங்கியின் அமலாக்க இயக்குனரின் கட்டளையின்படி நடத்தப்பட்டது எனக் கூறினார்.

2001-ஆம் ஆண்டுக்கான பணமோசடி தடுப்பு, பயங்கரவாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் எதிர்ப்பு சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட அந்த வங்கியில் ஒரு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியக் குற்றம் நடந்ததாகக் கருதி, அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது என பார்ஹான் தெரிவித்தார்.

அதன் படி, தேசிய வங்கி மேலாலரான அசிசுலை இந்த பரிசோதனைக்குத் தலைமைத் தாங்கி நடத்துமாறு கட்டளையிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், அவ்விசாரணையை தொடர்ந்து தேசிய வங்கி பல பொருட்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததாகக் குறிப்பிட்டார்.