Home நாடு ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் நிலை என்ன?

ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் நிலை என்ன?

747
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் சரியான தீர்வு கிடைக்காத நிலையில், அந்த விவகாரம் குறித்து இன்று புதன்கிழமை முடிவு செய்யப்படும் என பிதரமர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கான 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இளநிலை பட்டக் கல்விக்கான நேர்முகத் தேர்வுக்கு குறைவான இந்திய மாணவர்களுக்கே வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் உள்ள 27 ஆசிரியர் பயிற்சி கழகங்களில் பயிலுவதற்கு பெரும்பாலான இந்திய மாணவர்களுகு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மேலும் ஒரு சோதனைக் காலமாக இது அமைந்துவிடுமோ என்ற அச்சம் எல்லோரிடமும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

பயிற்சி ஆசிரியர்களுக்கான உளவியல் சோதனையில் பல இந்திய மாணவர்கள் தோல்வியைக் கண்டுள்ளதே, இந்த சந்தேகத்திற்கு இடம் கொடுத்துள்ளதாக மலேசிய நண்பன் குறிப்பிட்டுள்ளது.

நாடு தழுவிய நிலையில் தமிழ்மொழிப் பாடத்திற்கான தேவைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில், மற்ற பாடங்களான கணிதம், அறிவியல், உடற்பயிற்சி, போன்ற பாடங்களைப் போதிப்பதற்கு தேர்வுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

சுமார் 400-க்கும் மேற்பட்ட இடங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் வழங்கப்படாமல், இடையிலேயே தோல்விக் காண செய்வது கேள்விக் குறியாக உள்ளது என அது குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவையில், இன்று மெட்ரிகுலேஷன் விவகாரத்திற்கு எவ்வாறான தீர்வு அளிக்கப்படும் என்பதை பொறுத்தே, அடுத்து எழுந்துள்ள இவ்விவகாரத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசு எவ்வாறு தீர்த்து வைக்கும் என்பதை பார்க்க வேண்டும்.