Home உலகம் இலங்கை அரசின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட விபரீதம், உலக மக்கள் காட்டம்!

இலங்கை அரசின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட விபரீதம், உலக மக்கள் காட்டம்!

615
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு அந்நாட்டின் கவனக் குறைவும் அலட்சியமும்தான் காரணம் என உலக மக்கள் சமூக ஊடகங்களில் சாடி வருகின்றனர்.

350-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இது குறித்து இந்திய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அதனை தாங்கள் கவனமாக கையாளாமல் இருந்து விட்டதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்இந்த கருத்துக்குப் பின்னர் அவரை பதவி விலகுமாறு பொது மக்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த அமைப்புதான் இதற்கு காரணம் என முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. கடந்த மாதம் நியூசிலாந்தில் பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதுவதாக ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.