Home இந்தியா ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!

712
0
SHARE
Ad

சென்னை: தற்போது கத்தாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதுள்ள அளவற்ற ஆர்வத்தினால், திருச்சியைச் கோமதி மாரிமுத்து கடினமாக உழைத்து தனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

23-வது ஆசிய தடகளப் போட்டிகள் தற்போது தோகாவில் நடைபெற்று வரும் வேளையில், 2-வது நாளான கடந்த திங்கட்கிழமை, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  முதல் இடத்தைப் பிடித்தார்.