Home நாடு தெங்கு மைமுன் துவான் மாட் – புதிய தலைமை நீதிபதி

தெங்கு மைமுன் துவான் மாட் – புதிய தலைமை நீதிபதி

744
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான தெங்கு மைமுன் பிந்தி துவான் மாட் மலேசிய நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இன்று முதல் நியமிக்கப்படுவதாக பிரதமர் துறை அலுவலகம் அறிவித்தது.

பிரதமர் துன் மகாதீரின் ஆலோசனையின் பேரில் அவரது நியமனத்திற்கு மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா, ஆட்சியாளர்களின் மன்றத்தின் ஒப்புதலோடு அனுமதி வழங்கியுள்ளார் என்றும் பிரதமர் துறையின் அறிவிப்பு குறிப்பிட்டது.

tengku-maimun-infographics

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதியோடு பதவிக் காலத்தை நிறைவு செய்த முன்னாள் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும் நீதித்துறைக்கு ஆற்றிய சேவைகளுக்கும் பிரதமர் துறையின் அறிக்கை நன்றி தெரிவித்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

நீதித் துறையில் நீண்ட கால சேவையைக் கொண்டிருக்கும் தெங்கு மைமுன் நீதிமன்ற ஆணையராக (Judicial Commisioner) கடந்த அக்டோபர் 2006-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2007-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற அவர்அந்தப் பதவியில் மார்ச் 2011 வரை பணியாற்றினார்.

பின்னர் 1 ஏப்ரல் 2011 தொடங்கி 7 ஜனவரி 2013 வரை ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய தெங்கு மைமுன் 8 ஜனவரி 2013 தொடங்கி 25 நவம்பர் 2018 வரை மேல்முறையீட்டு நீதிபதியாகப் பணியாற்றினார்.

26 நவம்பர் 2018-இல் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தெங்கு மைமுன் இன்று முதல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கிறார்.

அதுமட்டுமின்றி நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் வரலாறு படைத்துள்ளார் தெங்கு மைமுனா.