Home நாடு 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் விவகாரத்தில் புங் மொக்தார் பிணையில் விடுவிப்பு!

2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் விவகாரத்தில் புங் மொக்தார் பிணையில் விடுவிப்பு!

751
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2.8 மில்லியன் ரிங்கிட் பணத்தை ஊழல் செய்ததன் பேரில் கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினரும் சபா மாநில அம்னோ கட்சித் தலைவருமான புங் மொக்தார் இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது மூன்று ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பில் அக்குற்றங்களை தாம் செய்யவில்லை என புங் மொக்தார் நீதிபதி ரொசினா அயோப் முன்னிலையில் கூறி விசாரணைக் கோரினார். 100,000 ரிங்கிட் பிணையில் நீதிபதி அவரை விடுவித்ததோடில்லாமல் அவரது கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் பிரிவு 17 கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனையும், ஊழல் பெற்ற பணத்தை விட ஐந்து மடங்கு பணத்தை செலுத்தும் அபராதமும் விதிக்கப்படும்.