அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக விளங்கிய 40 வயது சுதிடா திட்ஜாய் என்பவரை கடந்த புதன்கிழமை (மே 1) தாய்லாந்து மன்னர் அதிகாரபூர்வமாகத் திருமணம் செய்து கொண்டார். சுதிடா தாய் ஏர்வேஸ் விமானப் பணிப் பெண்ணாக பணிபுரிந்திருக்கிறார். தற்போது அவர் பட்டத்து இராணியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தாய்லாந்து மன்னர் இனி ‘அரசர் இராமா 10’ என அழைக்கப்படுவார்.
2014-இல் வஜ்ரலங்கோர்னின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற சுதிடா இப்போது மாமன்னரின் மனைவி – தாய்லாந்து நாட்டின் அரசி!
Comments