சென்னை: தனியார் விளம்பர நிறுவனத்தை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் லதா ரஜினிகாந்தை நேரில் வருமாறு பெங்களூரு அல்சூர் கேட் காவல் துறை மனு அனுப்பியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தினை, கர்நாடகாவில் உள்ள பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று வாங்கி விளம்பரம் செய்தது. எதிர்பார்த்தபடி கோச்சடையான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால், நட்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அந்த கடிதத்தில், இந்தப் படத்தின் மூலம் தங்களுக்கும் நட்டம் ஏற்பட்டதாகவும், அதனால், இழப்பீடு கொடுக்க முடியாது என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த தனியார் நிறுவனம், லதா ரஜினிகாந்த் வழங்கிய கடிதத்தை பரிசீலனை செய்தது. அக்கடிதம் போலியானது என்று தெரியவந்த நிலையில் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூறி அக்கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, லதா ரஜினிகாந்த் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் ஒரு முறை அழைத்து விசாரணைக்கு வராத லதா, இம்முறை, 20-ஆம் தேதி நேரில் வர இருப்பதாகக் கூறியுள்ளார்.