Home இந்தியா சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே இந்துதான், கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே இந்துதான், கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு!

709
0
SHARE
Ad

சென்னை: இந்திய நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி, 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது

மீதமுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனைத் தொடந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, சுந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஓர் இந்துதான் எனக் குறிப்பிட்டது அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

#TamilSchoolmychoice

இதனால், தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் அரவக்குறிச்சியில் கமல் ஹாசன் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம், சர்ச்சை பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக, இரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது