Home இந்தியா வன்முறையால் மேற்கு வங்காளத்தில் 16-ஆம் தேதியுடன் பிரச்சாரம் முடிவு!

வன்முறையால் மேற்கு வங்காளத்தில் 16-ஆம் தேதியுடன் பிரச்சாரம் முடிவு!

671
0
SHARE
Ad

புது டில்லி:  மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும் வன்முறையால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று வியாழக்கிழமை இரவு 10 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் ஏழாவது கட்டமாக வருகிற 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 56 தொகுதிகள் இடம்பெறுகின்றன

இதனையொட்டி, மேற்கு வங்காளத்தில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமை வன்முறையும், கலவரமும் வெடித்தது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது

#TamilSchoolmychoice

சிலை உடைப்பு போன்ற சம்பவங்கள் நடதுள்ளதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை வெள்ளியன்று மாலை 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், அதனை இன்றிரவு 10 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என அதிரடி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது