குவா மூசாங்: 15-வது பொதுத் தேர்தலுக்கு அம்னோ கட்சி தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவரான துங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டார்.
15-வது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் திடீரென நடக்கலாம் எனக் கூறிய அவர், அதற்காக தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சிகளுடனான இட ஒதுக்கீட்டு விசயமாக கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.
இவ்வாறான பேச்சு வார்த்தைகளின் போது, பல காலமாக கூட்டணி கட்சிகளாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் கட்சிகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதே மாதிரியான கண்ணோட்டத்தை நடப்பு இடைக்கால அம்னோ தலைவர் முகமட் ஹசானும், முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் சாஹிட் இப்ராகிமும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.