புது டில்லி: எவரெஸ்ட் மலையின் உச்சியை 23 முறை ஏறி 49 வயதான நேபாள ஷெர்ப்பா காமி ரிதா சாதனை படைத்துள்ளார்.
நேபாள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிகரத்தில் ஏறுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும். இதற்காக பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று வர முடியும்.
இந்த சாதனையின் போது, நேபாள மலை வாழ் மக்களான ஷெர்ப்பாக்கள் மலையேறும் ஆர்வலர்களுக்கு உதவியாக இருப்பார்கள். மலையேறும் பாதை, சிக்கல்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு அத்துப்படி என்பதால், மலையேறும் முயற்சியில் ஷெர்ப்பாக்களின் உதவி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு 23 முறை சென்று ஷெர்ப்பா காமி ரிதா சாதனை படைத்துள்ளார். வானிலையை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் எவரெஸ்ட் மலையேற்றம் இருக்கும்.