புது டில்லி: இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு நிகரான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரில் ஏற்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரிக்டர் அளவு 8 அல்லது அதற்கு மேல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரை தாக்கவிருப்பதாக ஓர் ஆய்வு மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி பாகிஸ்தான் வரை நீளும் இமய மலைத்தொடர் கடந்த காலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு மூலக் காரணமாக இருந்ததாக ஆய்வுக் குழுத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் டில்லி வரை உணரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இமயமலைத் தொடரை ஒட்டி சண்டிகர், டேராடூன், நேபாளத்தில் காத்மாண்டு போன்ற பெரு நகரங்கள் இருக்கின்றன. இதனால் இப்பகுதியில் வாழ்பவர்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.