Home One Line P1 அமைச்சரவை மறுசீரமைப்பு இல்லை, நேரடியாக தேர்தலே தீர்வு- வட்டாரம்

அமைச்சரவை மறுசீரமைப்பு இல்லை, நேரடியாக தேர்தலே தீர்வு- வட்டாரம்

713
0
SHARE
Ad
புதன்கிழமை அக்டோபர் 21 நடைபெற்ற இயங்கலை அமைச்சரவைக் கூட்டத்தில் மொகிதின் யாசின்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் குறித்து விவாதிக்க அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்ட சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் புத்ராஜெயாவில் நடைபெற்றதாக வட்டாரம் தெரிவித்தது.

நவம்பர் 6-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவு திட்டம் குறித்து அமைச்சர்களின் கருத்துக்கள் கோரப்பட்டு வருவதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

“அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வரவு செலவுத் திட்டம் வருகிறது. இதனால், பல வணிகங்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர்.

மக்களிடமிருந்து ஒரு புதிய ஆணையைப் பெறுவதில் மொகிதின் ஆர்வமாக உள்ளதாகக் கூறி, அமைச்சரவை மறுசீரமைப்பை வட்டாரம் நிராகரித்தது.

“மக்களின் ஆணையைப் பெறுவதற்கு ஒரே வழி தேர்தல்” என்று அவர் கூறினார்.

மற்றொரு வட்டாரம் கூறுகையில், தேசிய முன்னணி, பெர்சாத்து, மற்றும் பாஸ் தரப்புகள் தங்கள் வேட்பாளர்களை பெயரிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தொகுதித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை பட்டியலிடுவதற்கு தயாராகி உள்ளனர்.

“தேசிய முன்னணி, பாஸ் மற்றும் பெர்சாத்து இடையே இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் ஒப்புக் கொண்டனர். இப்போது ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது, ” என்று அவர் கூறியதாக எம்எம்டி தெரிவித்தது.

அடுத்த மாத தொடக்கத்தில் சில குழுக்கள் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்து வந்தன, ஆனால் “கொவிட் -19 காரணமாக எல்லாமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 700 முதல் 800 வரை அதிகரித்து வருவதால், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் அரசியல்வாதிகளை மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

“எண்ணிக்கை குறையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.