Home நாடு அம்னோ அமைச்சர் நோராய்னி அகமட் அமைச்சரவையில் இருந்து விலகினார்

அம்னோ அமைச்சர் நோராய்னி அகமட் அமைச்சரவையில் இருந்து விலகினார்

541
0
SHARE
Ad
நோராய்னி அகமட்

புத்ரா ஜெயா : ஆட்டம் கண்டிருக்கும் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து அம்னோவின் அமைச்சர் நோராய்னி அகமட் இன்று விலகினார். மொகிதின் அமைச்சரவையில் இருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் நோராய்னி ஆவார்.

நோராய்னி உயர் கல்வி அமைச்சராக மொகிதின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வந்தார். நோராய்னி அம்னோவின் மகளிர் பிரிவு தலைவியுமாவார்.

சில நாட்களுக்கு முன்னர் அம்னோவின் மற்றொரு அமைச்சராக ஷாம்சுல் அனுவார் நசரா பதவி விலகினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதின் பிரதமராகத் தொடர ஆதரவு தருவதாக துணைப் பிரதமரும் அம்னோ உதவித் தலைவருமான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று காலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.