Home நாடு அம்னோ அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசரா பதவி விலகினார்

அம்னோ அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசரா பதவி விலகினார்

565
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அம்னோ சார்பில் மொகிதின் யாசின் அமைச்சரவையில் எரிசக்தி, இயற்கை வள அமைச்சராகப் பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசரா இன்று தனது பதவியிலிருந்து விலகினார்.

தனது பதவி விலகலை அறிக்கை ஒன்றின் மூலம் ஷாம்சுல் அனுவார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மொகிதின் யாசினுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக இன்றைய அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அம்னோவின் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது முக்கியமானத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 9 அம்னோ அமைச்சர்கள் மொகினுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்ற அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இன்று அமைச்சர் ஒருவரின் பதவி விலகல் நிகழ்ந்திருக்கிறது.

தனக்கு வாய்ப்பு வழங்கிய பிரதமருக்கும், தான் அமைச்சராகப் பரிந்துரைத்த அம்னோவின் தலைமைத்துவத்திற்கும் ஷாம்சுல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.