Home நாடு மொகிதின் யாசினை ஆதரிக்காத 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மொகிதின் யாசினை ஆதரிக்காத 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

727
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற பட்டியல் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல் இன்று இணைய ஊடகங்களின் வழி பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மொகிதின் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்துள்ளது தெளிவாகியுள்ளது.

மொகிதினை ஆதரிக்காத அந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. நஜிப் அப்துல் ரசாக் (பெக்கான்)
  2. அகமட் சாஹிட் ஹாமிடி (பாகான் டத்தோ)
  3. அசாலினா ஒத்மான் சைட் (பெங்கெராங்)
  4. முகமட் நிசார் சக்காரியா (பாரிட்)
  5. அசிஸ் அப்துல் ரஹிம் (பாலிங்)
  6. நோ ஓமார் (தஞ்சோங் காராங்)
  7. அகமட் நாஸ்லான் இட்ரிஸ் (ஜெரண்டுட்)
  8. அகமட் ஜாஸ்லான் யாக்கோப் (மாச்சாங்)
  9. துங்கு ரசாலி ஹம்சா (குவா மூசாங்)
  10. ரம்லி முகமட் நோர் (கேமரன் ஹைலண்ட்ஸ்)
  11. அகமட் மஸ்லான் (பொந்தியான்)

மேற்கண்ட அனைவரும் மொகிதினுக்கான தங்களின் ஆதரவை மீட்டும் கொள்ளும் முடிவை கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் இந்தப் பட்டியலில் மேலும் சிலர் இணையக்கூடும் என்றும் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice