Home நாடு “தே. முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை” – ஷாஹிடான் காசிம்

“தே. முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை” – ஷாஹிடான் காசிம்

571
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த ஆண்டு தொடக்கத்தில் அரங்கேற்றப்பட்ட “ஷெராட்டன் நகர்வு” ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இதுவரையில் எந்த ஒரு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் யாருக்கு ஆதரவாகவும் சத்தியப் பிரமாண ஆவணம் எதிலும்  கையெழுத்திடவில்லை ஷாஹிடான் காசிம் கூறியுள்ளார்.

ஷாஹிடான் காசிம்  பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.

இதுவரையில் யாருக்கு ஆதரவாகவும் சத்தியப் பிரமாணங்கள் கையெழுத்திடப்படவில்லை என்றும், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டத்திற்குத் தான் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் செய்திகளிலும் உண்மையில்லை என ஷாஹிடான் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஷெராட்டன் நகர்வின்போது மட்டுமே நாங்கள் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக சத்தியப் பிரமாண அறிக்கையில் கையெழுத்திட்டோம்” எனவும் ஷாஹிடான் காசிம் தெரிவித்திருக்கிறார்.