Home One Line P1 அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படுமா?

அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படுமா?

670
0
SHARE
Ad
புதன்கிழமை அக்டோபர் 21 நடைபெற்ற இயங்கலை அமைச்சரவைக் கூட்டத்தில் மொகிதின் யாசின்

புத்ரா ஜெயா : நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23-ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இதுவென ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நேற்று புதன்கிழமை இயங்கலை வழியான அமைச்சரவைக் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்ற நிலையில் மீண்டும் இன்னொரு அமைச்சரவைக் கூட்டம் ஏன் என்ற கேள்வியும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் மொகிதின் யாசின் மாமன்னரையும் சந்தித்தார். கொவிட்-19 அபாயம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதற்குப் பின்னர் மொகிதின் யாசின் நேரடியாகக் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி மாமன்னருடனான சந்திப்பாகும்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக அரசியல் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்திருந்தார். கொவிட் 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்கும் பொருட்டு, தற்போதைக்கு ஆளும் தேசியக் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை அம்னோ எடுப்பதாகவும் சாஹிட் அறிவித்திருந்தார்.

இந்த சம்பவங்களையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது நாளைய அமைச்சரவைக் கூட்டம் புதிய அமைச்சரவை மாற்றங்களுக்கு வழிகோலும் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு அமைச்சர்களின் ஆதரவை மறு உறுதிப்படுத்தும் முடிவையும் நாளைய அமைச்சரவைக் கூட்டம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.