Home One Line P2 ஆஸ்ட்ரோ : அக்டோபர் 25 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : அக்டோபர் 25 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

576
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த வாரத்தில் எதிர்வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வரையில் ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

செவ்வாய், 20 அக்டோபர் முதல்

யார் அவன் (புதிய அத்தியாயங்கள் – 14-17)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா & குபேன் மகாதேவன்

காவல்துறையில் சரணடையுமாறு அமர் கவினிடம் கூறுகிறார். அமர், ஆதி மற்றும் ஜித்தன் தியாகராஜனைத் தேடுகின்றனர்.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 10-13)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகணேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்
ரம்யா பாங்காக்கில் உதவிக்காக காத்திருக்கிறார். சமர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வியாழன், 22 அக்டோபர்

சுவ்னா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி

நடிகர்கள்: அம்மி விர்க் & டானியா

வாழ்க்கையில் எந்த குறிக்கோள்களும் அக்கறையும் இல்லாத, சுதந்திரமான உற்சாகமான கிராமத்து இளைஞன், ஜீத். ஆனால், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த டேக் என்ற அழகான பெண்ணைச் சந்திக்கும் போது, அவரின் வாழ்க்கை மாறுகிறது.

வெள்ளி, 23 அக்டோபர்

கேஷ் பேக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மம்மூட்டி, ஸ்வராஜ் கிராமிகா & மம்முகோயா

நித்யானந்தா ஷெனாய் காசர்கோடு நகரைச் சேர்ந்தவர், இப்படம் கறுப்புப் பணத்தை சமாளிப்பதற்கான அவரது போராட்டத்தை சித்தரிக்கிறது.

சனி, 24 அக்டோபர்

மஹாந்தா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2 மணி

நடிகர்கள்: ஜீதேந்திரா, சஞ்ஜய் தத், மாதுரி டிக்சித், சக்தி கபூர் & கடேனி டென்சோங்பா

ஒரு தீயவரிடமிருந்து பாதுகாக்க சஞ்ஜயை விஜய் கைது செய்கிறான். ஆனால் சஞ்ஜய் விடுவிக்கப்பட்டபோது, தனது சகோதரனும் மனைவியும் கொலை செய்யப்பட்டதை அறிகிறான். அவர்களின் மரணங்களுக்காகப் பழிவாங்கவும், அவன் கைது செய்யப்பட்டதன் காரணத்தைக் கண்டறியவும் முடிவு செய்கிறான்.

மெபூபா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: சஞ்ஜய் தத், அஜய் தேவ்கன் & மனிஷா கொய்ராலா

ஒரு பணக்கார வணிகர், ஷ்ரவன், பாயலை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார். ஆனால், அவளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டப் பிறகு அவளை விட்டு விலகுகிறார். பின்னர், பாயல் கரண் என்ற கலைஞரைச் சந்திக்கிறாள். ஆனால், ஷ்ரவன் மீண்டும் தோன்றும்போது அவளுடைய உலகம் சிதைந்து போகிறது.

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – 15-16)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு |

ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன், யுவா, நவின் மற்றும் ஆல்வின் இறுதியாக லதாவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். சீன பேய்களிடையே தாத்தாவுக்கு இருக்கும் சக்தியையும் மரியாதையையும் ஆல்வின், நவின் மற்றும் யுவா உணர்ந்தனர்.

ஞாயிறு, 25 அக்டோபர்

ஜீ குடும்பம் விருதுகள் 2020 (முன்னோட்டம் – முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235), மாலை 4 மணி [பகுதி 1 – 1 நவம்பர்] [பகுதி 2 – 8 நவம்பர்] [பகுதி 3 – 15 நவம்பர்]| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ஜீ குடும்பம் விருதுகள் 2020 என்பது ஜீ தமிழ் அலைவரிசைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு. மேடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி கலைஞர்களின் நேர்த்தியான படைப்புகள் மற்றும் அவர்களின் சிறந்த நடிப்புக்கான பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வழங்குதல் என பலவற்றை இந்த நிகழ்ச்சி  உள்ளடக்கும்.

சிவப்பு கம்பளம் வரவேற்பு காட்சிகள், ப்ளூப்பர்ஸ், கலைஞர்களின் நேர்காணல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அற்புதமான சிறப்பம்சங்களைக் காட்டும்  முன்னோட்ட அத்தியாயத்தை இரசிகர்கள் ரசிக்கலாம். அதன்பிறகு, நவம்பர் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பப்படும் விருது நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 7)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்

இந்த அத்தியாயத்தில் போட்டியாளர்கள் தங்கள் கேட்வாக் திறன்களைக் (catwalk skills) வெளிபடுத்துவர். மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை