Home One Line P1 ஆண்டு, தொகுதிக் கூட்டங்களை அம்னோ ஒத்திவைத்தது

ஆண்டு, தொகுதிக் கூட்டங்களை அம்னோ ஒத்திவைத்தது

474
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து தொகுதிகளின் கூட்டங்களையும், அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தையும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு ஒத்திவைக்க அம்னோ மீண்டும் முடிவு செய்துள்ளது.

அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கருத்துப்படி, இந்த விவகாரத்தை அம்னோ நிர்வாகக் குழு ஏகமனதாக ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

கொவிட் -19 பாதிப்பால் அம்னோ தொகுதிகளின் கூட்டம் மற்றும் அம்னோ ஆண்டு பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இந்த ஒத்திவைப்பில் சுமார் 764 பொதுக் கூட்டங்கள் உள்ளன, அதாவது நாடு முழுவதும் ஒவ்வொரு 191 அம்னோ தொகுதிகளுக்கும், 4 பிரதிநிதி கூட்டங்கள்.

“பல்லாயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட கூட்டங்களால், கொவிட் -19 தொற்றுநோயை பரப்ப முடியும்” என்று அவர் கூறினார்.

“2019 அம்னோ பொதுக் கூட்டத்தின் தேதி 6 மற்றும் 7 டிசம்பர் அன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆகவே, 18 மாதங்களுக்குப் பிறகு, 2021-இல் ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்படலாம்.

“சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.