Home One Line P2 வாட்சாப்: மேசை கணினியில் காணொலி, குரல் பதிவு அம்சங்களைப் பயன்படுத்தலாம்

வாட்சாப்: மேசை கணினியில் காணொலி, குரல் பதிவு அம்சங்களைப் பயன்படுத்தலாம்

808
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ : பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சாப் பல்வேறு புத்தாக்க அம்சங்களுடனும், சந்தைத் தேவையை சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறது.

இந்த குறுஞ் செயலியை தங்கள் மேசைக் கணினிகளில், வலை பதிப்பைப் (Whatsapp Web/Desktop) பயன்படுத்தி ஒரு பெரிய திரையில் பார்ப்பதையும் அதன் மூலம் பணிகளைச் செய்யும் அனுபவத்தையும் பெறுவதற்கு பயனர்கள் முனைகிறார்கள்.

அதனைக் கருத்தில் கொண்டு, வாட்சாப்பின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் அதன் வலைப் பதிப்பிலும் புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளனர். வாட்சாப் வலைப் பதிப்பிற்காக பேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் சமீபத்திய அம்சங்கள் இப்போது வரை சிறந்தவையாக இருந்துள்ளன. தற்போது, குரல் பதிவு மற்றும் காணொலி அமைப்பை அது மேம்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

பேஸ்புக் நிறுவன வட்டாரங்களின்படி, வாட்சாப்பின் புதிய அம்சத்தின்படி, காணொலி பரிமாற்றமும், குரல் வழி பதிவும் கூடுதலாக இணைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இருப்பினும், இந்த புதிய அம்சம் தற்போது பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதால் பயனர்கள் பயன்படுத்த மேலும் சிறிது காலம் பிடிக்கலாம்.