
கோலாலம்பூர்: தேசிய உயர்க் கல்வி நிதிக் கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணக் கட்டுப்பாடுகளை மறுபடியும் அறிமுகப்படுத்தப்படலாம் என பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.
இதனால் வரையிலும் நிறைய பேர் இன்னும் தாங்கள் பெற்றக் கடனைச் செலுத்தாமல் இருப்பதாகவும், அதற்காக, மேலும் ஒரு சில வழிமுறைகளை கண்டறிந்து அக்கடன்களை பெற பிடிபிடிஎன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இது குறித்துப் பேசிய பிடிபிடிஎன் துணைத் தலைமை நிருவாகி மஸ்தூரா முகமட் காலிட், கடன் பெற்றவர்களின் கடப்பிதழ்கள், வாகன உரிமங்கள், மற்றும் சாலை வரி புதுப்பிப்பது போன்றவை கட்டுப்படுத்தப்படலாம் என அவர் கூறினார்.