Home நாடு வான் சைபுல் வான் ஜான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

வான் சைபுல் வான் ஜான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

534
0
SHARE
Ad
வான் சைபுல் வான் ஜான்

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமான வான் சைபுல் வான் ஜான் ஊழல் பணத்தைப் பெற்றதற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

எனினும் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரிய அவர், நீதிமன்ற வழக்கில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் எனவும் சூளுரைத்தார்.

பினாங்கு தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைபுல் ஜானா விபாவா என்ற அரசாங்கத்திட்டத்தின் கீழ் 6.9 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவருக்கு 400,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.