Home நாடு ‘கவிஞர்களைக் கொண்டாடுவோம்’ – தமிழ்க் குயிலார் கவியரங்கம்

‘கவிஞர்களைக் கொண்டாடுவோம்’ – தமிழ்க் குயிலார் கவியரங்கம்

693
0
SHARE
Ad

மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கம், மலேசியத் தமிழ்க்கவிதை வளர்மன்றம், மலேசியத் தமிழ்க்  கல்வியாளர் மகிழ்மன்றம் ஆகிய மன்றங்களின் தொடர் முயற்சியாக ஒவ்வொரு மாதமும் 7ஆம் நாளில் மறைந்த மரபு கவிஞர்களைக் கொண்டாடும் வண்ணம் ‘கவிஞர்களைக் கொண்டாடுவோம்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அவ்வகையில் 8-வது கவிஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச்சு மாதம் 7ஆம் நாள் (செவ்வாய்) தமிழ்க்குயிலார் முனைவர் கா. கலியபெருமாள் அவர்களைக் கொண்டாடும் வகையில் கவியரங்கம் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின் தகவல்கள் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

நாள்: 7 மார்ச்சு 2023
நேரம்: இரவு மணி 8.30
தளம்/இணைப்பு: Google Meet/ https://meet.google.com/odg-ziec-mqa)

மேலும், இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உயர்கல்விக் கூட மாணவர்களுக்காகத் ‘தமிழ்க்குயிலார் வினாடி வினா’ எனும் புதிர்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்ட WhatsApp குழுவில் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

WhatsApp/ புலனம்:

https://chat.whatsapp.com/Fn6mNPBIx0v1pi4KmquiLD

ஆகவே, மூத்த கவிஞர்களும் இளைய கவிஞர்களும் பங்கேற்கும் கவியரங்கம், பல்கலைக்கழக மாணவரின் இலக்கிய உரை, தமிழ்க்குயிலார் வினாடி வினாப் போட்டியின் பரிசளிப்பு விழா ஆகிய அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் நடைபெறவிருக்கிறது.

அனைவரும் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் எதிர் பார்க்கின்றோம்.
கவிஞரோடு இணைவோம்!

தொடர்புக்கு:

(011-36749858)
மகிழன் கணேசன் @நவீன்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்