Home நாடு நாடாளுமன்ற மேலவையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!

நாடாளுமன்ற மேலவையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இளைஞர் ஒருவரை நியமிக்க பிரதமர் மகாதீர் முகமட் ஒப்புதல் வழங்கியதற்கு கோலாலம்பூர் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதி ஆதரவு அளித்துள்ளது.

எனினும், அதன் தலைவர், நயிம் கூறுகையில், 11 மில்லியன் இளைஞர்களைக் கொண்ட இந்நாட்டில் ஒருவரை மட்டும் பிரதிநிதியாக நியமிப்பதை சற்று சீர்தூக்கிப் பார்க்கும்படியாக கூறியுள்ளார்.

அரசு ஒதுக்கீடுகளின் எண்ணிக்கையை அரசாங்கம் சற்று கவனிக்க வேண்டும். இன்னும், நிறைய இளைஞர்கள் தங்களின் பிரச்சனைகளை எவ்வாறு களைவது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான நிபுணத்துவம் கொண்ட தகுதியான இளைஞர் ஒருவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்படுவார் என டாக்டர் மகாதீர் நேற்று புதன்கிழமை அறிவித்தார்.