பெண்கள் காற்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் காற்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் வேலையை துவங்கி விட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
இதில் அட்லி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த செய்தி விஜய் இரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பெயர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.