Home நாடு லத்தீஃபா கோயா நியமனம் குறித்து பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்!- அன்வார்

லத்தீஃபா கோயா நியமனம் குறித்து பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்!- அன்வார்

605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து பிரதமர் மகாதீர் முகமட் முறையான ஒரு கூட்டத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

லத்தீஃபாவின் நியமனம் குறித்து தமக்கு அது குறித்த அறிவிப்பு வெளிவந்த பிறகே தெரியவந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

லத்தீஃபாவின் நியமனம் குறித்து அமைச்சரவையில் ஏன் அறிவிக்கப்படவில்லை என்று பிரதமர் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும், இந்த நியமனம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்திற்கு உடன்பட்டு செயல்படுத்தப்படவில்லை என்றும் பக்காத்தான் ஹாராப்பான் தேர்தல் அறிக்கையை மீறி இந்த நியமனம் செயல்படுத்தப்பட்டதையும் பிரதமர் விவரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், தாங்கள் அரசாங்கத்தின் நிருவாகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அன்வார் உறுதிப்படுத்தினார்.

இனி வரும் காலங்களிலும் எம்ஏசிசி சுதந்திரமாக செயல்படும் என தாம் நம்புவதாக அவர் கூறினார். மேலும், இப்பதவியில் இருப்பவர்கள் அரசியல் சார்ந்து செயல்படாமலிருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

லத்தீஃபாவின் பதவி விலகல் கடிதத்தை கட்சி ஏற்றுக் கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.