Home உலகம் கிரிக்கெட் : 150 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானைத் தோற்கடித்தது இங்கிலாந்து

கிரிக்கெட் : 150 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானைத் தோற்கடித்தது இங்கிலாந்து

1546
0
SHARE
Ad

மான்செஸ்டர் (இங்கிலாந்து) – நேற்று செவ்வாய்க்கிழமை  (ஜூன் 18) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் வலிமை குறைந்த ஆப்கானிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 50 ஓவர்களை நிறைவு செய்தபோது இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 8 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 150 ஓட்டங்கள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.

இன்று புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்தும் தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.