Home நாடு “பார்ஹாஷ் கூற்றுடன் நான் உடன்படவில்லை!”- அன்வார்

“பார்ஹாஷ் கூற்றுடன் நான் உடன்படவில்லை!”- அன்வார்

728
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான முகமட் அஸ்மின் அலி குறித்து தனது அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாராக்கின் கூற்றுக்கு தாம் உடன்படவில்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் சரியான முறையில் தகவல்களை பயன்படுத்தவும், வெளியிடவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்த விசாரணையை காவல் துறையினரிடமே ஒப்படைப்பது சிறந்தது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

பார்ஹாஷ் அஸ்மினை பதவி விலகக் கூறும் கூற்றினை தம்முடன் இணைத்து பேசுவதாகவும் அனவார் தெரிவித்தார். முன்னதாக, பார்ஹாஷ் அந்த காணொளி தொடர்பில் தமக்கு தொடர்பிருப்பதை திட்டவட்டமாக மறுத்தார்.

#TamilSchoolmychoice

அன்வார் மற்றும் பார்ஹாஷ் இருவரும் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட காணொளிப் பிரச்சனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.