தேசிய மின்சார வாரியம் 70 விழுக்காட்டு பங்குகளைக் கொண்டிருக்கும் மின்சக்தி உற்பத்தி நிலையம் ஒன்று குறித்து வெளியான எதிர்மறை செய்திகளாலும், அரசாங்கம் மின்சார விநியோகத்தை போட்டிச் சந்தையாக்கி மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கும் என்று வெளிவந்த ஆரூடங்களாலும் தெனாகா நேஷனலின் பங்குகள் சரிவடைந்தன. இதன் காரணமாக கோலாலம்பூர் பங்குச் சந்தையின் ஒட்டுமொத்தக் குறியீட்டில் 5.33 புள்ளிகள் குறைந்தன.
54 காசுகள் விலை சரிந்து 13 ரிங்கிட் 60 காசாக தெனாகாவின் பங்குகள் முடிவடைந்தன.
கோலாலம்பூர் பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாக மற்ற சில முக்கியப் பங்குகளும் சற்றே விலை சரிந்தன.