கோலாலம்பூர்: கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அமைப்பின் (எஸ்எம்எம்டிடி) கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோயில்களும் வருகிற ஜூலை 17 –ஆம் தேதி அதிகாலை மணி 4.02 முதல் காலை 7.00 மணி வரை நிகழும் சந்திர கிரகணத்தின் போது மூடப்படும் என்று அவ்வமைப்பின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.
ஜாலான் துன் எச்.எஸ். லீயில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஜாலான் புடுவில் அமைந்துள்ள கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம், மற்றும் பத்து மலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயங்கள் கிரகணத்தின் போது எந்த பூசை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சந்திர கிரகணத்தின் போது அபிஷேகங்களோ பூசைகளோ இருக்காது என்றும் காலை 7 மணிக்குப் பிறகு பிரார்த்தனை மீண்டும் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.