கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட ஐவரின் தடுப்புக் காவல் உத்தரவு முடிந்ததும் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஹசிக் மீதான ஆறு நாள் தடுப்புக் காவல் உத்தரவு நாளை சனிக்கிழமையுடன் முடிவடைய உள்ளது.
நேற்று வியாழக்கிழமை, நீதிமன்றம் கைது செய்யப்பட்ட அவர்களின் தடுப்புக் காவலை ஐந்து நாட்களிலிருந்து நான்கு நாட்களாக குறைத்தது.
இதற்கிடையில், அன்வாரின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் இன்னும் தடுப்புக் காவலில் இருப்பதாக ஹுசிர் கூறினார்.
முன்னதாக, அஸ்மினின் நற்பெயரைக் கெடுக்கவும் அவமதிக்கவும் ஓர் அரசியல் கட்சித் தலைவரால் வழி நடத்தப்பட்ட தீய எண்ணத்திலான சதி வேலை இது என காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் குறிப்பிட்டிருந்தார்.